வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 15 மார்ச் 2021 (12:52 IST)

நாளை மறுநாள் முதல் முன்பதிவு செய்யாத ரயில் பெட்டிகள் அனுமதி! – ரயில்வே அறிவிப்பு!

கொரோனா காரணமாக ரயில்களில் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டிருந்த நிலையில் நாளை மறுநாள் முதல் முன்பதிவில்லா பெட்டிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக கொரோனா காரணமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற நிலை உள்ளது. இந்நிலையிலையில் மார்ச் 17 முதல் முன்பதிவு இல்லாத பெட்டிகள் சில ரயில்களில் அனுமதிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி ரயில் எண் 06867/06868 விழுப்புரம் – மதுரை விழுப்புரம் சிறப்பு ரயில்

ரயில் எண் 06087/88 அரக்கோணம் – சேலம் – அரக்கோணம் MEMU ரயில்

ரயில் எண் 06115/16 சென்னை எழும்பூர் – புதுச்சேரி – எழும்பூர் சிறப்பு ரயில்

ரயில் எண் 06327/28 புனலூர் – குருவாயூர் சிறப்பு ரயில்

ஆகிய சிறப்பு ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் அனுமதிக்கப்படுவதாகவும், இந்த ரயில்கள் செல்லும் வழித்தடங்களில் உள்ள ரயில் நிலையங்களில் முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை பெற்று பயணிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.