Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தமிழகத்தில் கலவரம் வெடிக்கும்: கொக்கரிக்கும் மத்திய அமைச்சர்!

தமிழகத்தில் கலவரம் வெடிக்கும்: கொக்கரிக்கும் மத்திய அமைச்சர்!

திங்கள், 10 ஜூலை 2017 (13:49 IST)

Widgets Magazine

இந்து அமைப்பினர் மீது தாக்குதல் தொடர்ந்தால் தமிழகம் கலவர பூமியாகும் என பாஜகவை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
கன்னியக்குமரி மாவட்டத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் இந்து அமைப்பினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடக்கிறது. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்து அமைப்பினர் மீதான தாக்குதல் தொடர்ந்தால் தமிழகம் கலவர பூமியாக மாறி கலவரம் வெடிக்கும் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். மத்திய அமைச்சரின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மீண்டும் தனது முந்தைய கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார். ஒரு இயக்கத்தை சேர்ந்த தலைவர்கள் கொல்லப்பட்டால், அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் போராட மாட்டார்களா?. எனவே தான் தமிழகத்தில் கலவரம் வர வாய்ப்பு உண்டு என எச்சரிக்கை தான் செய்தேன் என்றார்.
 
மேலும் ராமநாதபுரம், தேனி, கன்னியாகுமரியில் இந்து தலைவர்கள் மீது தாக்குதல் நடந்து வருகிறது. மேற்குவங்ம் மாநிலத்தின் சூழ்நிலை தமிழகத்தில் வர வேண்டும் என விரும்புகிறார்களா. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

காஷ்மீருக்குள் எங்கள் ராணுவம் நுழையும்; சீனா எச்சரிக்கை

பாகிஸ்தான் அரசு கேட்டுக்கொண்டால் இந்தியா, பாகிஸ்தான் தவிர்த்து மூன்றாவது நாட்டின் ராணுவம் ...

news

ஆர்கே நகர் விவகாரம்: ஓபிஎஸ் அணியின் மதுசூதனன் அதிரடி கைது!

சென்னை ஆர்கே நகர் தொகுதியில் நிர்வாக சீர்கேடு நடப்பதாக அதிமுகவின் ஓபிஎஸ் அணியை சேர்ந்த ...

news

என்னோடு உடலுறவு வைத்துக்கொண்டால் மோட்சம் கிட்டும்: யோகா குருவின் காம வெறியாட்டம்!

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தன்னுடன் உடலுறவு வைத்துக்கொண்டால் மோட்சம் கிடைக்கும் என ...

news

120 மில்லியன் ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிவு

சுமார் 120 மில்லியன் ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிந்துள்ளதாக கூறப்படுகிறது

Widgets Magazine Widgets Magazine