வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 10 ஜனவரி 2023 (17:07 IST)

மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்க விண்ணப்பிக்கலாம்- சென்னை மாவட்ட ஆட்சியர்

Chennai
தமிழ்நாடு வஃக்பு வாரியத்தில் பதிவு செய்துள்ள, சென்னையில், வஃக்பு  நிறுவனங்களில் வேலை செய்யும் உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனம் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, ஒரு வாகனத்தின் மொத்த விலையில் ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தில் 50% இதில், எது குறைவோ அது மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தில் விண்ணப்பிப்பவர்கள் பதிவு செய்துள்ள வஃக்பு வாரிய நிறுவனத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றியவர்களாக இருக்க வேண்டும் எனவும், தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களாகவும், அவர்களின் வயது 18- 45க்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு வெளியிட்டுள்ளபடி, தக்க அடையாள சான்றுகளை விண்ணப்பத்துடன் சென்னையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சு. அமிர்ந்தஜோதி தெரிவித்துள்ளார்.