வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 12 செப்டம்பர் 2020 (15:39 IST)

8 மாதத்திற்கு பிறகு நல்ல காலம் பிறக்கும்! – சூசகமாய் சொன்ன உதயநிதி!

நீட் தேர்வு பயம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் 8 மாதத்திற்கு பிறகு மாணவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு பயம் காரணமாக மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் “நீட் தேர்வுக்கு பயந்து ஜோதி ஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்டதற்கு மத்தியில் ஆளும் பாஜகவும், மாநிலத்தில் ஆளும் அதிமுக அரசுமே காரணம்” என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் “மாணவர்கள் நாளை நடக்கும் நீட் தேர்வுக்கு தைரியமாக செல்லுங்கள். 8 மாதத்திற்கு பிறகு மாணவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும்” என கூறியுள்ளார். 8 மாதத்திற்கு பிறகு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெறும், நீட்டை தடை செய்யும் என்பதையே உதயநிதி சூசகமாக சொல்லியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.