1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 29 அக்டோபர் 2020 (08:25 IST)

பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேணுமா? – எய்ம்ஸ் செலக்‌ஷனை கலாய்த்த உதயநிதி!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக சண்முகம் சுப்பையாவிற்கு பதவி அளிக்கப்பட்டுள்ளது குறித்து உதயநிதி ஸ்டாலின் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

மதுரையில் கட்டப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான உறுப்பினர்கள் குழுவை மத்திய அரசு நேற்று அறிவித்தது. அந்த பட்டியலில் கீழ்பாக்கம் புற்றுநோயியல் அறுவை சிகிச்சை தலைவர் சுப்பையா சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சுப்பையா சண்முகம் மீது கார் பார்க்கிங் செய்யும் விவகாரத்தில் பக்கத்து வீட்டு பெண்ணுடன் நடந்த சண்டையில் பெண்ணின் வீட்டு முகப்பில் சிறுநீர் கழித்ததாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இதற்காக அப்போதே பலர் சுப்பையாவுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது அவர் எய்ம்ஸ் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள திமுக இளைஞரணி செயலாளர் மு.க.ஸ்டாலின் ”கலவரம் செய்தால் அமைச்சர், சிறுபான்மையினரை தாக்கினால் எம்.பி என காவிகள் வைத்திருக்கும் தகுதிகளில் தற்போது பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேண்டும் என பெண்களை அவமதித்தால் எய்ம்ஸ் உறுப்பினர் என்ற தகுதியையும் சேர்த்துள்ளது. மத்திய அரசின் இந்த செயல் கேவலமானது” என தெரிவித்துள்ளார்