1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 12 மே 2021 (17:50 IST)

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் உதயநிதி: டுவிட்டரில் வெளியான புகைப்படம்!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் உதயநிதி: டுவிட்டரில் வெளியான புகைப்படம்!
கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் திரையுலக பிரபலங்கள் அரசியல்வாதிகள் தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதை டுவிட்டரில் புகைப்படமாக பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அந்தவகையில் நடிகரும் சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி இன்று முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: கொரோனா தடுப்பின் முக்கிய ஆயுதம் தடுப்பூசி. முதல் தவணை கொரோனா தடுப்பூசியை இன்று போட்டுக்கோண்டேன். 
 
கொரோனாவை வெல்ல தடுப்பூசி மட்டுமே நம் முன்னிருக்கும் ஒரே வாய்ப்பு. எனவே, பொதுமக்கள் அனைவரும் தயங்காமல் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுங்கள். முகக்கவசம் அணியுங்கள்.நன்றி