திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (11:55 IST)

நீட்டை ஒழித்து கட்டுவோம்.. அந்தநாள் நிச்சயம் வரும்.. உதயநிதி ஸ்டாலின்

நீட்டை நிரந்தரமாக நீக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் அந்த நாள் நிச்சயம் வரும் என்றும் நீட்டை ஒழித்து கட்டுவோம் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் ஆறாவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது
 
நீட் ஒழிப்புப் போராளி தங்கை அனிதா நம்மை விட்டுப் பிரிந்து இன்றோடு 6 வருடங்கள்  ஆகின்றன. 
 
1,000 ஆண்டுகள் கடந்தாலும் தங்கை அனிதாவை நீட் தேர்வு கொலை செய்த வடு நம் மனதில் என்றும் இருக்கும்.
 
நீட் எனும் சமூக அநீதிக்கு எதிராக இறுதிவரை போராடிய தங்கை அனிதா மறைந்த இந்நாளில், ஓர் அண்ணனாக அவரை நினைவு கூர்கிறேன். 
 
நீட்டை நிரந்தரமாக நீக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. அந்தநாள் நிச்சயம் வரும். நீட்டை ஒழித்து கட்டுவோம்"
 
Edited by Mahendran