1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 25 ஜனவரி 2020 (09:02 IST)

டெவலப் ஆகும் தஞ்சாவூர்: பயணிகள் விமான சேவை தொடங்க திட்டம்!

தஞ்சாவூரில் உதான் திட்டத்தின் கீழ் சென்னை வரை உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

உள்ளூர் விமான சேவைகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசால் 2017ம் ஆண்டு உதான் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் புதிதாக பல நகரங்களில் விமான நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தில் தஞ்சாவூரில் உள்ளூர் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.

இந்த திட்டத்துக்கு கோரப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் தஞ்சாவூர் – சென்னை விமான சேவை வழங்க ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் தஞ்சை விமானப்படை தளத்தில் சுகோய் விமானப்படை பிரிவு தொடங்கப்பட்டதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்மூலம் விமானவழி சேவையில் தஞ்சாவூர் முக்கிய தளமாக மாற இருப்பதாக கூறப்படுகிறது.