உதயநிதி பெண்களை இழிவாகப் பேசியது கேவலமானது - குஷ்பு
சசிகலா குறித்து தான் பேசவில்லை அதற்கு மன்னிப்புக் கேட்கப்போவதில்லை என உதயநிதி தெரிவித்துள்ளார்
இன்னும் சில மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறவேண்டி, திமுக,அதிமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பலரும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் தோழியும் தினகரனின் உறவினருமான தற்போது சிறையிலுள்ள சசிகலா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக உதயநிதி ஸ்டாலினுக்கு அண்ணா திராவிடர் கழகத்தில் இளைஞரணி செயலாளர் ஜெயானந்த் திவாகரன் நோட்டீஸ் அனுப்பினார்.
மேலும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டுமெனவும் அதில் அவர் வலியுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில், உயதநிதி ஸ்டாலின் இன்று விழுப்புரத்தில் பிரசாரத்தில் பேசும்போது, தான் சசிகலாவைக் குறித்து பேசவில்லை; அதனால் மன்னிப்பும் கேட்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகை குஷ்பு உயதநிதியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதில், ஆளுங்கட்சியாக இருந்தால்மும் எந்தக் கட்சியாக இருந்தாலும் பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். கருணாநிதியின் குடும்பத்தில் இருந்து வந்த உதயந்தி ஸ்டாலின் பெண்கள் குறித்துப் இழிவாகப் பேசியுள்ளது கேவலானது எனத் தெரிவித்துள்ளார்.