Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கூடங்குளம் அணு உலை விபத்து குறித்து சுப.உதயகுமார் பேட்டி

வீரமணி பன்னீர்செல்வம் 

Last Modified: புதன், 14 மே 2014 (19:40 IST)

Widgets Magazine

அணு உலையில் தரமற்ற உதிரி பாகங்கள் உள்ளன என்ற குற்றச்சாற்றை ஆரம்பம் முதல் நாங்கள் கூறி வந்தோம். அதை உறுதிப்படுத்தும் வகையில் அணு உலையில் உள்ள வெந்நீர் குழாய் வெடித்து 6 ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
எனவே, கூடங்குளம் அணு உலை தொடர்பாக சார்பாற்ற அறிவியல் குழு விசாரணை நடத்த வேண்டும். இதை நாங்கள் ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வந்துள்ளோம்.
 
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகும் இந்த சமயத்தில் அணு உலையில் ஏற்பட்ட விபத்து குறித்து அணு உலை நிர்வாகமே அறித்திருப்பதைப் பார்க்கும்போது செயல்படாத அணு உலையை இழுத்து மூடுவதற்கான நாடகமாகத்தான் தெரிகிறது.
 
ஒவ்வொரு முறையும் 700 வாட் மின்சாரம் வருகிறது; 800 வாட் மின்சாரம் வருகிறது; 900 வாட் மின்சாரம் வருகிறது என்று எழுத்து மூலமும், வாய் மூலமும் கூறிவந்த நிர்வாகம் தற்போது அணு உலையில் ஏற்பட்ட விபத்து குறித்து வெளிப்படையாகக் கூறியிருப்பது பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது.
 
அணுசக்தி துறையின் இந்த செயல்பாடுகளெல்லாம் இயங்காத அணு உலைக்கான நொண்டி சாக்காகத்தான் தெரிகிறது.
 
முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் மேற்கு வங்கத்தில் உள்ள ஹரிபூர் அணு உலையை மம்தா பானர்ஜி எதிர்க்கிறார். அதேபோல் நீங்கள் கூடங்குளம் அணு உலையை எதிர்க்க வேண்டும் என்று கூறியபோது, ஹரிபூர் அணு உலை துவங்கும் நிலையில் உள்ளது. ஆனால் கூடங்குளம் அணு உலை முடிவடையும் தருவாயில் உள்ளது. எனவே கூடங்குளம் அணு உலை அமைவதை தவிர்க்க முடியாது என்று தெரிவித்தார். ஆனால் கூடங்குளம் அணு உலையின் 2வது, 3வது யூனிட்கள் இன்னும் முடிவடையவில்லை. முதல் அணு உலையிலும் தரமற்ற உதிரி பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
 
இந்த சூழ்நிலையில், திமுக, சிபிஅய், சிபிஎம் ஆகிய முக்கிய கட்சிகள் தங்களுடைய நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இந்த விபத்து தொடர்பாகவும் சார்பற்ற விசாரணை நடத்த வேண்டும்.
 
அங்கே அணு உலை இயங்கவும் இல்லை. மின்சாரம் தயாரிக்கவும் இல்லை. அப்படி அங்கே மின்சாரம் தயாரிக்கப்படுகிறது என்றால் அந்த மின்சாரம் எங்கே போகிறது, எந்த மின் இணைப்புகள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
 
இந்த விபத்தைக் காரணம் காட்டி ஒரு நாடகம் நடத்தி தப்பிக்க முயற்சிக்கிறார்கள் என்றே நாங்கள் கருதுகிறோம். கூடங்குளம் அணு உலையில் மின்சாரம் தயாரிக்கப்படவில்லை. ஜெயலலிதா அவர்கள் திருநெல்வேலியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது 45 நிமிடம் தமிழ்நாட்டின் மின் பற்றாக்குறை குறித்துப் பேசினார். ஆனால் அப்போது இந்த மின் பற்றாக்குறையைப் போக்க கூடங்குளத்திலிருந்து மின்சாரம் கிடைக்கும் என்று குறிப்பிடவோ, பேசவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கூடங்குளம் போரட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் பேசினார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே முடிவு எடுக்கப்படும் - ஜெயலலிதா

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகுதா‌ன் எ‌ந்த முடிவையு‌ம் எடு‌க்க முடியு‌ம் எ‌ன்று ...

news

தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது உண்மை இல்லையா? - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக வேட்பாளர்

நரேந்திர மோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானிற்கு செல்ல வேண்டுமென பேசி சர்ச்சையை ஏற்படுத்திய ...

news

நாடாளுமன்றத் தேர்வுக் குழு : டக்ளஸ் அழைப்பு, ததேகூ நிராகரிப்பு

இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ...

news

'அத்வானியின் பதவி குறித்து சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும்' - நிதின் கட்கரி

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் மத்தியில் பாஜக தலைமையிலான ...

Widgets Magazine Widgets Magazine