திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 23 ஜனவரி 2024 (18:30 IST)

செமஸ்டர் தேர்வெழுத 2 மாணவர்களுக்குத் தடை: திருச்சி சட்டப் பல்கலை அதிரடி..!

செமஸ்டர் தேர்வு எழுத இரண்டு மாணவர்களுக்கு தடை விதித்து திருச்சியில் சட்டக்கல்லூரி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
திருச்சியில் அமைந்துள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் இளங்கலை இறுதி ஆண்டு படித்து வரும் பட்டியலின மாணவர்களுக்கு குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து கொடுத்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. 

 
இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் விசாரணை செய்த நிலையில் சம்பந்தப்பட்ட இரண்டு மாணவர்கள் நடப்பாண்டு செமஸ்டர் தேர்வு எழுத தடை விதித்துள்ளது.  மேலும் பட்டியல் இன மாணவருக்கு குளிர்பானத்தில் சிறிது கலந்து கொடுத்த புகாரில் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.  
 
ஏற்கனவே சம்பந்தப்பட்ட இரண்டு மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் செமஸ்டர் தேர்வையும் எழுத தடை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran