வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 22 ஏப்ரல் 2020 (08:30 IST)

தங்கைக்கு போன் செய்து தாறுமாறாக பேசியவர்! தட்டிக்கேட்ட அண்ணனுக்கு கத்திக் குத்து!

நாமக்கலில் தங்கையிடம் தவறாக பேசிய நபரை தட்டி கேட்க சென்ற அண்ணனை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் அருகே உள்ள கரியப்பெருமாள் புதூரை சேர்ந்தவர் கௌதம். கோழி பண்ணையில் பணிபுரிந்து வரும் இவருக்கு திருமணமான தங்கை ஒருவரும் உள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்கிற நபர் கௌதமின் தங்கை மொபைல் எண்ணுக்கு அழைத்து தவறாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கௌதம் இதுகுறித்து ராமச்சந்திரனுடன் சண்டையிட்டதால் இருவருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டுள்ளது.

அதற்கு பழிவாங்கும் நோக்கில் தனது நண்பர் மனோஜ் என்பவருடன் சேர்ந்து கொண்டு கௌதமை தாக்கியுள்ளார் ராமச்சந்திரன். இந்த சண்டையில் கௌதம் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் ராமச்சந்திரனையும், மனோஜையும் கைது செய்துள்ளனர்.