Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

போன் மூலம் கெட்ட வார்த்தை, ஆபாச பேச்சு - போலீசாருக்கே டார்ச்சர் கொடுத்த நபர்கள்


Murugan| Last Modified புதன், 1 பிப்ரவரி 2017 (11:43 IST)
போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு, கெட்ட வார்த்தைகளால் திட்டியும், ஆபாசமாகவும் பேசி வந்த இரு வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 
கோவை மாநகர கட்டுப்பாட்டு அறைக்கு இரண்டு நபர்கள், கடந்த 2 மாதங்களாக, வெவ்வேறு மொபைல் எண்களில் இருந்து தொடர்பு கொண்டு போலீசாருக்கு தொல்லை கொடுத்துள்ளனர். ஆண் போலீசார் எடுத்தால் கெட்ட வார்த்தகளால் திட்டியும், பெண் போலீசார் எடுத்தால் ஆபாச வார்த்தைகளால் பேசியும் டார்ச்சர் கொடுத்துள்ளனர்.
 
இதனால்,  அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்டுப்பட்டு அறை காவல் அதிகாரிகள், மாநகர கமிஷனர் அமல்ராஜ் மற்றும் துணை கமிஷனர் லட்சுமி ஆகியோரிடம் புகார் அளித்தனர். இந்த புகார் சைபர் கிரைம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
இதுகுறித்து விசாரணை நடத்திய சைபர் கிரைம் போலீசார், வேடப்பட்டியை சேர்ந்த ஸ்ரீகாந்த் மற்றும் ஒத்தக்கால் மண்டபத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரையும் கைது செய்தனர்.
 
அவர்கள் இருவரும்தான், செல்போன் மூலம் வெவ்வோறு எண்களிலிருந்து தொடர்பு கொண்டு கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கு தொல்லை கொடுத்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், அவர்கள் ஒவ்வொருவரிடமிருந்து 10 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


இதில் மேலும் படிக்கவும் :