1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சனி, 3 ஆகஸ்ட் 2024 (14:56 IST)

இரண்டு ஊராட்சி மன்ற தலைவர்கள் அமைச்சர் சி.வெ. கணேசன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆவட்டி,பொடையூர், லக்கூர்,வடபாதி ஆகிய ஊர்களில் பொதுமக்களிடையே குறை கேட்கும் நிகழ்ச்சி தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் தலைமையில் நடைபெற்றது.
 
இதில் ஆவட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா ஆதிமூலம் மற்றும் 
மா பொடையூர் ஊராட்சி மன்ற தலைவர் வாசுதேவன் ஆகியோர்கள் அமைச்சர் முன்னிலையில் திமுக கட்சியில் இணைந்துள்ளனர்.
 
இந் நிகழ்விற்கு பின்னர்  பொது மக்களின் கோரிக்கைகளை  மனுக்களை பெற்றுக் கொண்டு அமைச்சர் பேசியதாவது......
 
படிப்படியாக பொதுமக்கள் கொடுத்த மனுக்களை பரிசீலனை செய்து உடனடியாக தீர்வு காணப்படும்.
 
பொதுமக்கள் எங்கள் ஊருக்கு பேருந்துகள் வரவில்லை என அமைச்சரிடம் தெரிவித்தனர்.
 
இதற்கு பதில் அளித்த அமைச்சர் லக்கூர் பேருந்து வழித்தடத்தை ஆக்கிருப்பு காரர்களிடம் இருந்து போலீசார் மற்றும் வருவாய் துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றி பேருந்து வசதி செய்து தருவதாக உறுதியளித்தார்.