பெண் போலீஸ் மீது ஆசிட் வீச்சு - திருப்பத்தூரில் அதிர்ச்சி


Murugan| Last Modified சனி, 24 டிசம்பர் 2016 (14:07 IST)
ஒரு பெண் காவல் அதிகாரி மீது இரண்டு மர்ம நபர்கள் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 
திருப்பத்தூரை அடுத்து உள்ள குரிசிலாப்பட்டு என்ற பகுதியில் வசிப்பவர் லாவண்யா(30). இவரின் கணவர் சுரேஷ் லாரி ஒட்டுனர். இவர் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறார். 
 
இவர் நேற்று மாலை வழக்கம் போல் பணி முடிந்து, இரவு 9.30 மணியளவில், இரு சக்கர வாகனத்தில், காவல் நிலையத்தின் பின்புறமாக உள்ள காவலர் குடியிருப்பை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரே வந்த அடையாளம் தெரியாத 2 பேர், அவர் மீது ஆசிட்டை வீசி விட்டு தப்பிச் சென்று விட்டனர்.
 
அதில் அவரின் முகம், கழுத்து பகுதியில் பலத்த காயம் அடைந்தன. இதனால் அவர் வலியில் அலறித்துடித்தார். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு, இதுபற்றி அருகிலிருந்து போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். 
 
அவர்கள் விரைந்து வந்து லாவண்யாவை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
 
அவர் மேல் ஆசிட் வீசிய மர்ம நபர்கள் யார்?..  எதற்காக ஆசிட் வீசப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
இந்த சம்பவர் திருப்பத்தூர் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :