செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 11 மே 2020 (15:38 IST)

கொலைகார அதிமுக: மாணவியின் கொடூர மரணத்தால் ஆதங்கம்!

சமூக வலைத்தளமான டிவிட்டரில் #கொலைகார_அதிமுக என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. 
 
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகிலுள்ள சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியை நேற்று இருவர் பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளனர். இதில் அந்த மாணவி 95% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   
 
இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்ட நிலையில், மாணவியின் தந்தைக்கும், முருகன் தரப்புக்கும் ஏற்கனவே இருந்த முன்பகையே இந்த சம்பவத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.   
 
இந்த முன்பகை காரணமாக ஏற்கனவே அந்த மாணவியின் சித்தப்பா  வெட்டிக்கொல்லப்பட்ட நிலையில் தற்போது மாணவிக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவத்தை நிகழ்த்திய நிலையில் அதிமுக பிரமுகர்கள் முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  
 
தற்போதைய தகவலின் படி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 
 
இந்நிலையில் இந்த சம்பவத்தால் பெரிதும் கொதித்து சமூக வலைத்தளங்களில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் வெளிபாடாக காலை முதல் சமூக வலைத்தளமான டிவிட்டரில் #கொலைகார_அதிமுக என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.