திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 7 செப்டம்பர் 2020 (08:22 IST)

#திமுக_வேணாம்_போடா: ட்விட்டரை திணறவிடும் பதிவுகள்!!

சமூக வலைத்தளமான ட்விட்டரில் #திமுக_வேணாம்_போடா என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. 
 
திரை உலக பிரபலங்கள் சிலர் இந்தி மொழிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய டீசர்ட்களை அணிந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. குறிப்பாக டிவிட்டரில் #இந்தி_தெரியாது_போடா என்ற ஹேஷ்டேக் நேற்று வைரல் ஆனது, இன்று டிரெண்டாகிக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பாஜகவுக்கு எதிராக தங்களுடைய எதிர்ப்பை காண்பிக்கும் காண்பிக்கும் வகையில் இந்தி மொழிக்கு எதிராக பலர் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். திமுக எம்பி கனிமொழி உள்பட பலர் இந்த ஹேஷ்டேக்கிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். 
 
இந்நிலையில், தற்போது #திமுக_வேணாம்_போடா என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. திமுக அரசியல் ஆதாயத்திற்கு பிற மொழியை இழிவுப்படுத்துவதாகவும், கலாசாரத்தை சீர் குலைப்பதாகவும் பதிவிடப்பட்டு வருகிறது.