வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 20 மே 2020 (18:33 IST)

மொட்டை மாடிக்கு சென்ற இரட்டை சகோதரிகள் தூக்கில் தொங்கி தற்கொலை: பெரும் பரபரப்பு

வேலூர் அருகே காட்பாடியில் இரட்டைச் சகோதரிகள் மொட்டை மாடிக்கு ஆன்லைன் வகுப்புக்கு சென்றபோது திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடியில் பாலசுப்பிரமணியன் என்பவருக்கு ஹரிபிரியா, பத்மபிரியா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் பிளஸ் 1 படித்து விட்டு பிளஸ் டூ வகுப்பிற்காக செல்ல காத்திருக்கின்றனர் 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இருவரும் பள்ளி ஆசிரியர்கள் மூலம் ஆன்லைனில் பணம் படித்ததாக தெரிகிறது. இதனையடுத்து இன்று காலையும் அவர்கள் மொட்டை மாடியில் உள்ள அறைக்கு சென்று ஆன்லைனில் பாடம் படித்துக் கொண்டிருந்தனர். மதியம் நெடுநேரம் நீண்ட நேரமாகியும் சாப்பாட்டிற்கு இருவரும் கீழே இறங்கி வராததால் சந்தேகம் அடைந்த சகோதரிகளின் தந்தையின் மேலே சென்று பார்த்த போது இருவரும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் 
 
இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் விரைந்து வந்து உடனடியாக இருவரது பிணத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இரட்டை சகோதரிகள் ஒரே நேரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதற்கு என்ன காரணம் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்