1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 17 ஜூலை 2018 (10:56 IST)

காது கேளாத சிறுமியை சீரழித்த 15 பேர் - சென்னையில் அதிர்ச்சி

சென்னை அயனாவரத்தை சேர்ந்த 12 வயது சிறுமியை மிரட்டியும், மயக்க மருந்து கொடுத்தும் 15க்கும் மேற்பட்டோர் பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
சென்னை அயனாவரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்கு டெல்லியை சேர்ந்த ஒரு தொழிலதிபர் பல வருடங்களாக வசித்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒரு மகள் வெளி மாநிலத்தில் தங்கி படித்து வருகிறார். இளைய மகள் சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு வயது 12. 
 
இந்நிலையில், அந்த சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், தாங்கள் குடியிருந்து வரும் அடுக்குமாடி குடியிறுப்பில் பணிபுரிந்து வரும் 15க்கும் மேற்பட்டோர் கடந்த 7 மாதங்களாக தனது மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக புகார் அளித்தார்.
 
அந்த அடுக்கு டி குடியிறுப்பில் தனியார் செக்யூரிட்டி, பிளம்பர், எலக்ட்ரிஷியன் என தனியார் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
 
இதில், 66 வயதான லிஃட் ஆபரேட்டர் ரவிக்குமார் உள்ளிட்ட சிலர் அந்த சிறுமியை கடந்த ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். காலியாக இருக்கும் வீடுகள், தரைத்தளம், உடற் பயிற்சி மையம், மொட்டை மாடி என பல இடங்களுக்கும் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்னார். 
 
அப்போது, செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படும் எடுத்து மிரட்டி கடந்த 6  மாதங்களாக தொடர்ந்து அந்த சிறுமியை துன்புறுத்தி வந்துள்ளனர். இதை யாரிடம் கூற தயங்கிய அந்த சிறுமி, சமீபத்தில் ஊரிலிருந்து வந்த அவரது சகோதரியிடம் கூறி அழுதுள்ளார். இதன் பின்னரே போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
 
சிறுமி அடையாளம் காட்டியதன் அடிப்படையில் லிப்ஃட் ஆபரேட்டர் ரவி, பிளம்பர் சுரேஷ், காவலாளிகள் சுகுமாரன், அபிஷேக் என 6 பேர் மீது போக்ஸோ சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இன்னும் இதில் எத்தனை பேர் சம்பந்தப்பட்டுள்ளனர் என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.