திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 21 ஏப்ரல் 2025 (11:00 IST)

தவெகவின் அடுத்த மூவ்.. கோவையில் பூத் கமிட்டி கருத்தரங்கு! - நேரில் கலந்து கொள்ளும் விஜய்!

தவெகவின் அடுத்த மூவ்.. கோவையில் பூத் கமிட்டி கருத்தரங்கு! - நேரில் கலந்து கொள்ளும் விஜய்!

தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ள நிலையில் விஜய் விரைவில் கோவைக்கு பயணிக்க உள்ளார்.

 

2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை குறி வைத்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தவெக போட்டியிட உள்ள முதல் தேர்தல் என்பதால் ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே அனைத்து தேர்தல் ஏற்பாடுகளையும் கட்சியினர் பரபரப்பாக செய்து வருகின்றனர். 

 

முன்னதாக கட்சியின் முதல் மாநாடு, நிர்வாகிகள் கூட்டம் உள்ளிட்டவை நடத்தப்பட்ட நிலையில் விரைவில் கட்சி பூத் கமிட்டி கருத்தரங்கு நடத்தப்படும் என ஏற்கனவே கட்சி தலைவர் விஜய் அறிவித்திருந்தார். அதன்படி ஏப்ரல் 26,27ம் தேதிகளில் கோயம்புத்தூரில் உள்ள குரும்பப்பாளையம் எஸ்.என்.எஸ் கல்லூரி வளாகத்தில் தவெகவின் பூத் கமிட்டு கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

 

இந்த பூத் கமிட்டி கருந்தங்கில் விஜய் கலந்து கொண்டு களப்பணிகள் குறித்தும், பூத் கமிட்டியை வலுவாக்குவது குறித்தும் பேச உள்ளார். இதை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி என் ஆனந்த் அறிவித்துள்ள நிலையில் கோவையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

 

Edit by Prasanth.K