திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 26 மே 2018 (18:32 IST)

ஸ்டெர்லைட் ஆலையை மூடினால் மட்டுமே போஸ்ட் மார்டம்; ஆட்சியருக்கு பொதுமக்கள் நிபந்தனை

ஸ்ரெட்லைட் ஆலையை மூடினால் மட்டுமே எஞ்சிய உடல்களை பிரேத பரிசோதனை செய்ய சம்மதிப்போம் என்று ஆட்சியருக்கு பொதுமக்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.

 
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற பொதுமக்கள் பேரணியில் காவல்துறையினர் நடத்திய துப்பக்கிச் சூடு சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
 
இந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடலை உடற்கூறு ஆய்வு செய்தோ, செய்யாமலோ பதப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 7 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று ஆட்சியர் சந்தீப் நந்தூரியை பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார். 
 
அப்போது ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக அரசாணை பிறப்பித்தால்தான் எஞ்சிய உடல்களை பிரேத பரிசோதனை செய்ய சம்மதிப்போம் என்று கூறியுள்ளனர்.