செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 5 ஜூலை 2024 (12:24 IST)

தூத்துக்குடி கே.எஃப்.சி. உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமம் இடைக்கால ரத்து.. என்ன காரணம்?

தூத்துக்குடியில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் கே.எஃப்.சி. உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமம் இடைக்கால ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
பழைய எண்ணெய்யை தூய்மைப்படுத்த மெக்னீசயம் சிலிக்கேட் சிந்தடிக்கை பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
18 கிலோ மெக்னீசியம்  சிலிக்கேட் சிந்தடிக்,  தூய்மைப்படுத்தப்பட்ட 45 லிட்டர் பழைய எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், 12 மணி நேரத்திற்கும் மேலாக பயன்படுத்தாமல் இருந்த 56 கிலோ சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
மேலும் கே.எஃப்.சி. உணவகத்தின் உரிமம் இடைக்கால ரத்து என்றும்,  மறு உத்தரவு வரும் வரை கடையை திறக்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
தூத்துக்குடி சின்னத்துரை ஜவுளி கடை வளாகம், சாலை ஓரங்களில் உள்ள பானிபூரி கடைகளிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர் என்பது  குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran