Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

செல்லாது.. செல்லாது...பொதுக்குழு செல்லாது.. - தினகரன் காட்டம்

செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (12:26 IST)

Widgets Magazine

இன்றைய பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.


 

 
அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று காலை சென்னை வானகரத்தில் கூடியது. அதில் சசிகலா நியமனம் செல்லாது உட்பட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஜெயலலிதா மட்டுமே நிரந்தர பொதுச்செயலாளர் எனவும், இனிமேல் அதிமுக கட்சியில் பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
அதில் முக்கியமாக, கட்சியை வழி நடத்த வழி காட்டும் குழு அமைக்கப்பட்டுள்ளது. முழு அதிகாரம் பொருந்திய அந்த வழிகாட்டு குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்-ஸும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்களிடம் தினகரன் பேசியதாவது :
 
பொதுச்செயலாளர் சசிகலா மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும் எனவும். எனவே அவரில்லாத இந்த கூட்டமும், அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லாது. இந்த தீர்மானங்கள் செல்லுமா, செல்லாதா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும். துரோகமும், துரோகமும் கூட்டணி வைத்தும் நடக்கும் ஆட்சியை பொதுமக்களும், பொதுமக்களும் விரும்பவில்லை.
 
மறைந்த மாணவி அனிதாவின் வீட்டிற்கு நான் சென்றிருந்த போது, இந்த ஆட்சியை வீட்டிக்கு அனுப்புமாறு என்னிடம் பலரும் கூறினார். மேலும், நான் செல்லும் இடமெங்கும் பொதுமக்கள் இதையே கூறுகிறார்கள்.
 
நடப்பது ஜெ.வின் ஆட்சி அல்ல. தேர்தல் வந்தால் இவர்கள் டெபாசிட் இழப்பார்கள். அப்போது உண்மையான அதிமுக யார் எனத் தெரிய வரும். ஜெயலலிதா அமர்ந்த இடத்தில் ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி ஆகியோரை பார்க்க தொண்டர்களுக்கும், எங்களுக்கும் துளிகூட விருப்பமில்லை. எனவே, அவர்களை வீட்டிற்கு அனுப்பும் வேலையை நான் ஏற்கனவே துவங்கி விட்டேன். 
 
திமுகவுடன் நாங்கள் கை கோர்த்து விட்டதாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதில் உண்மையில்லை. தேர்தல் வந்தால் எங்களுக்கும் திமுகவிற்கும் தான் போட்டி” என அவர் தெரிவித்தார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஜெயலலிதாவை என்ன பாடுபடுத்தியிருப்பார்கள்? சீறிய வளர்மதி

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஆட்சியை கலைப்போம் என்பவர்கள் ஜெயலலிதாவை என்ன ...

news

ஓ.பி.எஸ், எடப்பாடிக்கே அனைத்து அதிகாரங்களும் - தீர்மானம் நிறைவேற்றம்

அதிமுக கட்சியை வழி நடத்தும் குழு அமைக்கப்பட்டு அதற்கு தலைவர்களாக முதல்வர் எடப்பாடி ...

news

வாரிசு அரசியல் இந்தியாவில் வழக்கமாக உள்ளது; ராகுல் காந்தி

இந்தியாவில் பெரும்பான்மையாக வாரிசு அரசியல் உள்ளது என்றும் இதனால் என் மீது குற்றம் சுமத்த ...

news

சசிகலா நியமனம் ரத்து ; இனி பொதுச்செயலாளர் பதவியே கிடையாது - தீர்மானம் நிறைவேற்றம்

தற்போது நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், சசிகலாவின் பொதுச்செயலாளர் ரத்து என ...

Widgets Magazine Widgets Magazine