திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 23 அக்டோபர் 2018 (11:23 IST)

உப்பை தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும் - ஜெயக்குமார் ஆடியோ குறித்து தினகரன்

வெளியான ஆடியோவில் இருப்பது அமைச்சர் ஜெயக்குமாரின் குரல்தான் என ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

 
கடந்த சில நாட்களாக பெண்ணுடன் ஒருவருடன் அமைச்சர் ஜெயக்குமார் பேசுவதாக ஒரு ஆடியோ வெளியாகியிருந்தது. அதில், சிபாரிசுக்கு வந்த தனது மகளை இப்படி செய்து விட்டீர்களே.. தற்போது குழந்தை பிறந்து விட்டது என்ன செய்ய? என அப்பெண் புலம்புவது பதிவாகியிருந்தது. 
 
ஆனால், இதை மறுத்துள்ள ஜெயக்குமார் “சமூக வலைதளங்களில், வெளியாகியிருக்கும் ஆடியோ என்குரல் கிடையாது. எனது குரலில் ஆடியோ மார்பிங் செய்யப்பட்டுள்ளது. என்மீது களங்கம் கற்பிக்கும் நோக்கில் தினகரன் தரப்பினர் இவ்வாறு செய்து வருகின்றனர். மேலும் என்னைப் போன்று பல ஜெயக்குமார்கள் இருக்கின்றனர். யாரிடமும் நான் பேசவில்லை. இதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” என கூறியுள்ளார்.
 
இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த தினகரன் “ஆடியோவை கேட்டால் அது ஜெயக்குமாரின் குரல் போலத்தான் இருக்கிறது. உப்பை தின்றவர்கள் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும். இது முதலமைச்சரிடம் கேட்டீர்களா? அதற்கு அவர் பதில் சொன்னாரா? இதுபற்றி அவர்கள்தான் கூற வேண்டும்” என தினகரன் கூறினார்.