செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 16 டிசம்பர் 2017 (15:33 IST)

டிடிவி தினகரன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்: யாருடைய கணிப்பு தெரியுமா?

ஆர்கே நகரில் இடைத்தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பது கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது. இந்நிலையில் பல கருத்துக்கணிப்புகள் வெளிவந்தவாறு உள்ளது. சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பு ஒன்று தினகரன் வெற்றி பெறுவார் என கூறியது.
 
ஆர்கே நகர் தேர்தலில் திமுக, அதிமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. இந்த போட்டியில் வெற்றி கடைசி நேரத்தில் யார் பக்கம் வேண்டுமானாலும் திரும்பலாம். இதனால் அனைத்து கட்சியினரும் தீவிரமாக தேர்தல் களத்தில் சுழன்று வருகின்றனர்.
 
இந்நிலையில் டிடிவி தினகரன் அணியில் உள்ள பிரபல நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பிரபல தமிழ் வார பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் டிடிவி தினகரனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது எனவும், அவர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் எனவும் கூறியுள்ளார்.