வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 27 அக்டோபர் 2021 (12:29 IST)

ஓபிஎஸ் எப்போதும் நியாயமாகத்தான் பேசுவார்: டிடிவி தினகரன்

ஓ பன்னீர்செல்வம் எப்பொழுதும் நியாயத்தை பேசுவார் என அமமுக தலைவர் டிடிவி தினகரன் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கூறியது அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஓபிஎஸ் அவர்களுக்கு கேபி முனுசாமி உள்பட பலர் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஓபிஎஸ்-ன் இந்த கருத்துக்கு டிடிவி தினகரன் கூறியபோது தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வருவது தான் எங்களது இலக்கு என்றும் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக ஓபிஎஸ் கூறியிருப்பது சரியானதுதான் என்றும் அவர் எப்போதும் நியாயத்தை மட்டுமே பேசுவார் என்றும் மனதில் பட்ட கருத்தை மட்டுமே துணிந்து சொல்வார் என்றும் கூறியுள்ளார் 
 
மேலும் அதிமுகவை மீட்டெடுப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் அமமுக என்றும் அந்த முயற்சியை இறுதிவரை தொடரும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.