இடைத்தேர்தலுக்கு தயாராகும் டிடிவி தினகரன் ஜெயானந்துக்கு பதிலடி

TTV
Last Updated: ஞாயிறு, 12 ஆகஸ்ட் 2018 (21:04 IST)
பணம் கொடுத்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்று கூறிய ஜெயானந்துக்கு அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதிலடி கொடுத்துள்ளார்.

 
திருப்பரங்குன்றம் தொகுதியில் வெகு நாட்களாக இடைத்தேர்தல் நடக்காமல் உள்ளது. திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ. தலைவர் கருணாநிதி மறைந்ததால் இரு தொகுதியிலும் இணைந்தே இடைத்தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
திமுக இரு தொகுதிகளையும் கைப்பற்ற தீவிரமாக உள்ளது. ஏற்கனவே ஜெயலலிதா மறைவால் நடைபெற்ற ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 
 
தற்போது திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட தயாராகி வருகிறார். திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதி தேர்தல் குறித்து பணம் கொடுத்தால் யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம் என்ற ஜெயானந்த் திவாகரன் கூறியிருந்தார்.
 
இதற்கு டிடிவி தினகரன், கத்துக்குட்டிகளுக்கு எல்லாம் பதில் சொல்ல தேவையில்லை. இந்த இடைத்தேர்தல் வெற்றி மூலம் விமர்சகர்களுக்கு பதில் அளிப்போம் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :