Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சுதாகரனை சந்தித்து பேசிய தினகரன் - சிறையில் பாசப் போராட்டம்


Murugan| Last Updated: வெள்ளி, 16 ஜூன் 2017 (15:45 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தனது சுதாகரனை நேற்று சந்தித்து பேசியுள்ளது தெரியவந்துள்ளது.

 

 
இரட்டை இலை சின்ன விவகாரத்தில் சிறைக்கு சென்ற தினகரன் சமீபத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். அதைத் தொடர்ந்து, அவருக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் 32 பேர் ஆதரவு தெரிவித்தனர். அதன் அந்த எண்ணிக்கையில் 2 கூடி தற்போது அவருக்கு 34 பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில், கடந்த 5ம் தேதி பெங்களூர் அக்ராஹார சிறையில் உள்ள சசிகலாவை அவர் நேரில் சந்தித்து பேசினார். ஆனால், அப்போது, அதே சிறையில் இருக்கும் தனது சகோதரர் சுதாகரனை அவர் சந்திக்கவில்லை எனத் தெரிகிறது.
 
இந்நிலையில், அவர் நேற்று மீண்டும் பெங்களூர் சென்றார். ஆனால், இந்த முறை அவர் சசிகலாவை சந்திக்கவில்லை  என்றும் சுதாகரனை பார்த்து சுமார் 40 நிமிடங்கள் பேசியதாக கூறப்படுகிறது. இதை கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தியும் உறுதி செய்துள்ளார். மேலும், மற்றொரு நாள் அவர் மீண்டும் அங்கு சென்று சசிகலாவை சந்திப்பார் எனக் கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :