Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தினகரனுக்கு ஜாமின் கிடைக்குமா? - நீதிமன்றத்தில் நாளை விசாரணை

புதன், 17 மே 2017 (15:37 IST)

Widgets Magazine

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள தினகரன் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.


 

 
டெல்லியை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரிடம், இரட்டை இலை சின்னத்தை பெற தினகரன் தரப்பு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக புகார் கூறிய டெல்லி போலீசார் தினகரன், அவரது வழக்கறிஞர் மல்லிகார்ஜுனா ஆகியோரை கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்தனர். 
 
அதன்பின் தொடர்ந்து தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், தினகரனின் வழக்கறிஞர் மல்லிகார்ஜூனா ஆகியோரிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
 
விசாரணை முடிந்து, கடந்த 1ம் தேதி டெல்லி தனி நீதிமன்றத்தில் தினகரனை போலீசாரை ஆஜர்படுத்தினர். அப்போது கடந்த 15ம் தேதி அவரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். எனவே, தினகரன் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின் அவரது நீதிமன்ற காவலை வருகிற 29ம் தேதிவரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
இந்நிலையில், தினகரன் சார்பில் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது. ஒருவேளை அவருக்கு ஜாமின் கிடைத்தால், அவர் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சூறைக்காற்றால் பாம்பன் பாலத்தை கடக்க முடியாமல் தவித்த ரயில்

ராமேஸ்வரம் பகுதியில் கடும் சூறைக்காற்று வீசியதால் பாம்பன் பலத்தை கடக்க முடியாமல் ...

news

நித்தியானந்தாவுக்காக அடாவடியில் இறங்கிய நடிகை ரஞ்சிதா

நித்தியானந்தா பெயரில் சென்னை பல்லாவரத்தில் ரூ.30 கோடி மதிப்புள்ள நிலத்தை நடிகை ரஞ்சிதா ...

news

நித்திக்கு ஆதரவாக நடிகை ரஞ்சிதாவின் கலாட்டா!

நடிகை ரஞ்சிதா பிரபல சாமியார் நித்தியானந்தாவின் தீவிர பக்தை, சீடர் என்பது ஊர் அறிந்த ...

news

கை விட்ட மோடி ; கலங்கி நிற்கும் ஓ.பி.எஸ் - நடந்தது என்ன?

ஆளும் பாஜக அரசு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நெருக்கம் காட்டி வருவதை ஓ.பி.எஸ் ...

Widgets Magazine Widgets Magazine