வியாழன், 16 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 2 மே 2019 (10:34 IST)

டார்கெட் ஓபிஎஸ்; தினகரனின் ஸ்டெப் பை ஸ்டெப் அட்டாக்!!

ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஒன்று சேர்ந்து தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கியதும், தன்க்கு ஆதரவு தெரிவித்த சிலரோடு தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார். 
 
அதன் பின்னர் ஆர்.நகர் தேர்தலில் போட்டியிட்டு வியக்கதக்க வெற்றியை கண்டார். இப்போது நடந்து முடிந்த தேர்தலிலும் வலிமையான வேட்பாளர்களை களமிறக்கி அதிமுகவை கதிகலங்க செய்தார். இப்போது 4 தொகுதி இடைத்தேர்தலிலும் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளார். 
 
அதோடு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக பதிவு செய்து சின்னத்தையும் வாங்கிவிட்டார். இந்நிலையில், தினகரனின் தற்போதைய டார்கெட் ஓ.பன்னிர் செல்வம் என கூறப்படுகிறது. ஆம், இதற்கு முன்னர் அமமுகவை சேர்ந்த தங்க தமிழ்செல்வன், ஓபிஎஸ் பாஜகவில் இணைந்துவிட்டதாகவும், ஆளுநர் பதவிக்கு ஆசைப்படுவதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 
இவரை தொடர்ந்து இப்போது தினகரனே நேரடியாக ஓபிஎஸ்-ஐ டார்கெட் செய்து பேச துவங்கியுள்ளார். சமீபத்தில் தினகரன் கலந்துக்கொண்ட பிரச்சாரத்தின் போது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வென்ற ஆர்.கே.நகர் தொகுதியிலேயே, இரட்டை இலை சின்னம் தோற்கடிக்கப்பட்டது, மக்கள் சக்தி முன்பு துரோகம் வெல்ல முடியாது.
 
பன்னீர்செல்வத்தை பதவி விலக சொல்லிவிட்டு மீண்டும் போடி தொகுதியில் நிற்க சொல்லுங்கள் பார்ப்போம். பாஜகவின் ஏஜெண்டாக அவர் இருந்ததால்தான் பதவியில் இருந்து இறக்கினோம் என்றும் பேசியது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.