திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 4 அக்டோபர் 2022 (12:00 IST)

மணிரத்னத்தை பாராட்டுவது தமிழனின் கடமை! – திமுக எம்.பி திருச்சி சிவா!

Siva MP
பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கியதற்காக மணிரத்னத்தை தமிழர்கள் பாராட்ட வேண்டும் என எம்.பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள படம் பொன்னியின் செல்வன். கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வனின் கதையை தழுவிய இந்த படத்தை காண பலரும் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதேசமயம் படத்தில் அருள்மொழியை இந்து அரசனாக காட்டியிருப்பதாகவும், மேலும் சில சர்ச்சைகளும் எழுந்துள்ளன. இந்நிலையில் படம் பார்த்துவிட்டு அதுகுறித்து எழுதியுள்ள திமுக எம்.பி திருச்சி சிவா “பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் போன்றவர்கள் முயற்சித்தும் முடியாத நிலையில், அந்த காவியத்தை திரைப்படமாக்கியுள்ள இயக்குனர் மணிரத்னத்தை பாராட்டுவதை ஒரு தமிழனின் கடமையாகவே உணர்கிறேன்.

மணிரத்னம் இடதுசாரி குணம் கொண்டவர் என்ற ரீதியில் விமர்சனம் வைக்கப்படுவது காண நேர்ந்தது. காந்தியையும் அண்ணாவையும் விமர்சித்த உலகம் இது” என தெரிவித்துள்ளார்.

Edited By: Prasanth.K