ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 9 செப்டம்பர் 2020 (20:53 IST)

மாநிலங்களவை துணைத்தலைவர் ஆகிறாரா திருச்சி சிவா?

மாநிலங்களை துணைத்தலைவர் தேர்தல் நடத்தபடாமல் இருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் சமீபத்தில் குரல் கொடுத்து வந்த நிலையில் தற்போது மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று தெரிகிறது
 
ஆளும் கட்சியில் பாஜகவை சேர்ந்த பிரபலம் ஒருவர் மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் துணை தலைவர் தேர்தலில் திமுக எம்பி திருச்சி சிவா போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக திருச்சி சிவாவை நிறுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்துள்ளதாகவும் இதனை மாற்ற கூட்டணி கட்சிகள் ஏற்று கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. எனவே மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் திருச்சி சிவா வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்