செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 17 மார்ச் 2023 (19:52 IST)

திருச்சி சிவா -கே.என் நேரு திடீர் சந்திப்பு: சமாதான பேச்சுவார்த்தையா?

திருச்சி சிவா மற்றும் கேஎன் நேரு ஆதரவாளர்கள் சமீபத்தில் மோதி கொண்டனர் என்பதும் கேஎன் நேரு ஆதரவாளர்களால் திருச்சி சிவாவின் வீடு சமீபத்தில் தாக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இது குறித்து இரு தரப்பினர் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். திமுக தலைமை இது குறித்து நடவடிக்கை எடுத்து நான்கு பேர்ர்களை சஸ்பெண்ட் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தற்போது திருச்சி சிவா மற்றும் அமைச்சர் கே.என்.நேரு ஆகிய இருவரும் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். திருச்சி சிவாவின் இல்லத்திற்கே அமைச்சர் கே.என்.நேரு சென்றதாகவும் இரு தரப்பினரும் சமாதான பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் தெரிகிறது 
 
இருவரின் ஆதரவாளர்களுக்கு இடையே சமீபத்தில் கடும் மோதல் ஏற்பட்ட நிலையில் தற்போது திமுக தலைமையின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப இரு தலைவர்கள் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து சமாதானம் செய்து கொண்டதாக தெரிகிறது.
 
Edited by Mahendran