வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (10:09 IST)

உறவுக்கு ஒத்துக்கொள்ளாத புது மணப்பெண்; கொன்று நாடகமாடிய கணவன்!

திருச்சியில் திருமணமாகி இரண்டு மாத காலம் ஆகியும் உறவுக்கு ஒத்துக்கொள்ளாத மனைவியை கணவனே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் வாழவந்தான்புரத்தில் வசிக்கும் அருள்சாமியின் மனைவி கிறிஸ்டி ஹெலன்ராணி. இருவருக்கும் திருமணமாகி இரண்டு மாதங்கள் ஆகின்றன. இந்நிலையில் நேற்று முன் தினம் கொள்ளிடம் ஆற்றங்கரையில் ஹெலன்ராணி அரைநிர்வாணமாக இறந்து கிடந்துள்ளார். அவரை யாராவது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் ஹெலன்ராணியின் கணவர் அருள்சாமியிடம் விசாரித்ததில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. திருமணமாகி இரண்டு மாதங்கள் ஆகியும் ஹெலன்ராணி – அருள்சாமி இடையே தாம்பத்ய உறவு இல்லாமல் இருந்து வந்துள்ளது. அருள்சாமி வற்புறுத்தியும் ஹெலன்ராணி அதற்கு மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருள்சாமி தனது மனைவியை கொள்ளிடம் ஆற்றில் மூழ்கடித்து கொன்றிருக்கிறார். பிறகு அவரே பாலியல் வன்கொடுமை நிகழ்ந்தது போல மனைவியின் ஆடைகளை கிழித்து செட்டப் செய்திருக்கிறார். விசாரணையில் போலீஸாரிடம் உண்மையை ஒப்புக்கொண்ட அருள்சாமி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.