வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 9 மே 2017 (06:49 IST)

பேச்சுவார்த்தை தோல்வி: மே 15-ல் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் உறுதி

13-வது ஊதிய ஒப்பந்தம் குறித்த போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 15ஆம் தேதி முதல் தொழிலாளர்கள் சங்கம் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்திருந்தது.





இந்நிலையில் நேற்று இரவு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து திட்டமிட்டபடி வரும் 15ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று போக்குவரத்து தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து சி.ஐ.டி.யு தொழிற்சங்கத் தலைவர் சவுந்தர்ராஜன் கூறியபோது, 'தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகை வழங்கிய பிறகு ஊதிய உயர்வு பேச்சை தொடங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. திட்டமிட்டப்படி 15 ம் தேதி வேலை நிறுத்தம் நடைபெறும். வேலை நிறுத்தத்தை கைவிட அரசு சார்பில் எந்த உறுதியும் அளிக்கவில்லை. தமிழகத்தில் ஓடும் பேருந்துகளில் பாதி காலாவதியானவை. 22 ஆயிரம் அரசு பேருந்துகளில் 17 ஆயிரம் பேருந்துகள் ஓடத் தகுதியற்றவை' என்று தெரிவித்தார்.