ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 12 அக்டோபர் 2023 (18:28 IST)

தீபாவளி போனஸ்.. போக்குவரத்து ஊழியர்களின் முக்கிய கோரிக்கை..!

தீபாவளி போனஸ் 20% வழங்கிட வேண்டுமென போக்குவரத்துத்துறைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
 
கடந்த ஆண்டுகளில் கொரோனாவை காரணம் காண்பித்து 20 சதவீத போனசை 10 சதவீதமாக குறைத்ததை இந்த ஆண்டு செய்யக் கூடாது என்றும், இந்த ஆண்டு முழுமையாக 20 சதவீத போனசை வழங்க வேண்டும் என்றும் போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
மேலும் தீபாவளி போனஸ் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தற்பொழுது அழைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ள போக்குவரத்து ஊழியர்கள், ஒரு மாதத்திற்கு முன்பாகவே முன் பணமாக  ரூ.10,000 வழங்க வேண்டும் என போக்குவரத்து துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
 
 இதனை அடுத்து தீபாவளி போனஸ் தொடர்பாக போக்குவரத்து ஊழியர்களை இன்னும் ஒரு சில நாட்களில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் இந்த ஆண்டு போக்குவரத்து ஊழியர்களுக்கு 20% போனஸ் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran