வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (18:47 IST)

வேலூர் மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் திருநங்கை

வேலூர் மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் திருநங்கை
தமிழகத்தில்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
குறிப்பாக அதிமுக திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன
 
இந்த நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேலூர் மாநகராட்சியில் 37 வது வார்டு திமுக சார்பில் திருநங்கை ஒருவர் போட்டியிடுகிறார்
 
 திருநங்கை கங்கா என்பவர் அந்த பகுதியில் போட்டியிட உள்ளதாகவும் அவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் அந்த பகுதி திமுகவினர் தெரிவித்து வருகின்றனர்