1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 24 டிசம்பர் 2024 (11:57 IST)

விழுப்புரம் பக்கிங்காம் கால்வாயில் மூழ்கிய 3 சகோதரர்கள்.. சடலமாக மீட்கப்பட்ட சோகம்..!

விழுப்புரத்தில் பக்கிங்காம் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று சகோதரர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவருக்கு லோகேஷ், விக்ரம் மற்றும் சூர்யா ஆகிய மூன்று மகன்கள் இருந்தனர். அவர்கள் கால்வாயில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது, மேம்பாலத்தின் மீது மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, லோகேஷ் எதிர்பாராத விதமாக கால்வாயில் தவறி விழுந்தார்.

அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதை கண்ட இருவரும் அண்ணனை காப்பாற்ற கால்வாயில் குதித்தனர். இதில் மூன்று பேரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், 24 மணி நேர தேடலுக்கு பின்னர், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மூவரின் உடல்களும் மீட்கப்பட்டன. போலீசார், அவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Mahendran