டிராஃபிக் ராமசாமி தற்கொலை மிரட்டல்: முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்!

டிராஃபிக் ராமசாமி தற்கொலை மிரட்டல்: முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்!


Caston| Last Modified சனி, 15 ஜூலை 2017 (18:01 IST)
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என கூறியும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி பாரிமுனையில் உள்ள தனது அலுவலகத்தின் மாடியில் இருந்து தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

 
 
ஓஎன்ஜிசிக்கு எதிராக கதிராமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் கைது செய்யப்பட்ட 10 பேரை விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும். மேலும் அங்கு தடியடி நடத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் டிராஃபிக் ராமசாமி.
 
மேலும் விவசாயிகளின் நலனில் இந்த அரசு அக்கறை காட்டவில்லை. எனவே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், சர்ச்சைக்குரிய அமைச்சர்களும் பதவி விலக வேண்டும். அமைச்சர் விஜயபாஸ்கர் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளது என்றார். நாளை காலைக்குள் எனது கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் நான் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டல் விடுத்து வருகிறார் டிராஃபிக் ராமசாமி.
 
அமைச்சர் காமராஜ் என் மீது பொய் கேஸ் போட்டு என்னை போலீஸ் கைது செய்தனர். ஆனால் பொய் கேஸ் போட்ட காமராஜுக்கு அதே போலீசார் சல்யூட் அடிக்கிறார்கள். ஜெயலலிதாவே இறந்த பிறகு என்ன அம்மா ஆட்சி என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :