குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் நாளை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வந்ததன் காரணமாக குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகளிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் நாளை முதல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.