1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 22 அக்டோபர் 2020 (13:16 IST)

ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி எப்போது? அரசு அறிவிப்பு!

ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி எப்போது?
கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த 7 மாதங்களாக இருந்துவரும் நிலையில் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் அனைத்து சுற்றுலா தளங்களும் முடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை சுத்தமாக நின்று போனதால் அதனை நம்பி வாழ்ந்த ஏராளமான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மத்திய மாநில அரசுகள் அறிவித்து வரும் தளர்வுகள் காரணமாக சுற்றுலாத் தலங்கள் ஒவ்வொன்றாகத் திறக்கப்பட்டு வருகின்றன. தாஜ்மஹால் உள்பட பல சுற்றுலா தளங்கள் ஒரு சில நிபந்தனைகளோடு திறக்கப்பட்டு தற்போது சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பொது முடக்கம் காரணமாக 7 மாதங்களாக முடங்கியிருந்த ஒகேனக்கல்லில் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி என தர்மபுரி ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார் 
 
ஒகேனக்கல் சுற்றுலாதளத்தில் ஏழு மாதத்திற்கு பின் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் சீரடைய வழி வகை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது