Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சென்னை பள்ளி கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை


sivalingam| Last Modified செவ்வாய், 31 அக்டோபர் 2017 (13:45 IST)
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதை அடுத்து நேற்று ஒருமணி நேரம் முன்பே மாணவர்களை வீட்டுக்கு அனுப்ப மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார். மேலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டது.


 
 
இந்த நிலையில் வானிலை அறிக்கையின்படி இன்று மாலை சென்னையின் பல இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதை அடுத்து நாளை பள்ளிகள், மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார். மேலும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே வெளியே வரவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
 
மேலும் நாளை மறுநாள் வானிலை நிலைமையை பொறுத்து பள்ளிகள், கல்லூரிகள் இயங்குமா? என்பது குறித்து அறிவிப்பு செய்யப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


இதில் மேலும் படிக்கவும் :