வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (08:55 IST)

100 ரூபாய்க்கும் குறைந்தது தக்காளி விலை.. பொதுமக்கள் நிம்மதி..!

Tomato
தக்காளி விலை கடந்த சில வாரங்களாக அதிகரித்துக் கொண்டே வந்தது என்பதும் சில நாட்களுக்கு முன்னால் ஒரு கிலோ தக்காளி ரூ.200 என்று விற்பனையாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதையும் பார்த்தோம்.
 
 இந்த நிலையில் சமீப காலமாக தக்காளி விலை படிப்படியாக குறைந்து வருகிறது என்றும் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகரித்து வருகிறது என்றும் செய்திகள் வெளியான 
 
இந்த நிலையில் ஒரு கிலோ தக்காளி நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் நூறு ரூபாய் என விற்கப்பட்ட நிலையில் இன்று பத்து ரூபாய் குறைந்து 90 ரூபாய் என விற்பனை ஆய் வருகிறது,. நீண்ட இடைவேளைக்கு பிறகு தக்காளி விலை ஒரு கிலோ 100 ரூபாய்க்கும் குறைந்து உள்ளது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இதேபோல் படிப்படியாக தக்காளி விலை இன்னும் குறைய வாய்ப்பு இருக்கிறது என்றும் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Siva