செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 16 ஆகஸ்ட் 2023 (11:36 IST)

ஒரு கிலோ ரூ.40 தான்.. வரத்து அதிகமாகி வருவதால் இன்னும் குறைகிறது தக்காளி..!

Tomato
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தக்காளி விலை ஒரு கிலோ 150 முதல் 200 ரூபாய் வரை விற்பனையாகி வந்த நிலையில் படிப்படியாக தக்காளி விலை தற்போது குறைந்து கொண்டே வருகிறது. 
 
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளியின் வரத்து அதிகமாகி வருவதை அடுத்து தக்காளி விலை இன்று ஒரு கிலோ 40 ரூபாய் என விற்பனையாகி வருகிறது சில்லறை கடைகளில் ஒரு கிலோ 50 ரூபாய் என விற்பனையாகி வருவதாக தகவல் வழியாக உள்ளன. 
 
தக்காளி வரத்து வரும் நாட்களில் இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தக்காளி விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் தக்காளி விலை உயர வாய்ப்பில்லை என்றும் தக்காளி விளைச்சல் அதிகமாகியுள்ளதை அடுத்து தக்காளி விலை இன்னும் குறையவே வாய்ப்புள்ளது என்றும் வியாபாரிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
 நீண்ட நாட்களுக்கும் இல்லாத பின்னர் தக்காளி விலை இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
Edited by Mahendran