கிலோ ரூ.150ஐ தாண்டியது தக்காளி விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!
தக்காளி விலை படிப்படியாக அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில் இன்று மேலும் உயர்ந்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை 140 என விற்பனையான நிலையில் இன்று பத்து ரூபாய் மேலும் அதிகரித்து 150 என விற்பனையாகி வருகிறது.
ஆனால் சில்லறை விலை கடைகளில் தக்காளி விலை 160 அல்லது 170 ரூபாய் என விற்பனை ஆகலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இரண்டாம் தர தக்காளியின் விலை 120 முதல் 130 வரை விற்பனையாகி வருகிறது.
தக்காளி விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டு வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Mahendran