வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: புதன், 1 ஏப்ரல் 2015 (08:17 IST)

சுங்கச் சாவடி கட்டணம் உயர்வு: இன்று முதல் நடைமுறைக்கு வந்தது

தமிழகத்திலுள்ள சில சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு இன்று (ஏப்ரல் 1) முதல் நடைமுறைக்கு வந்தது.


 


 
தமிழகத்தில் 41 சுங்கச் சாவடிகள் உள்ளன. இதில் 29 சுங்கச் சாவடிகளில் தனியாரும், 12 சுங்கச் சாவடிகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் கட்டணம் வசூலிக்கின்றன.
 
ஒவ்வொரு நிதியாண்டு தொடக்கத்திலும் 10 சதவீத கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன்படி, தமிழகத்தில் சூரப்பட்டு, வானகரம், பரனூர், ஆத்தூர், கிருஷ்ணகிரி, சாலைப்புதூர், பள்ளிகொண்டா, வாணியம்பாடி, எட்டூர் வட்டம், கப்பலூர், நாங்குநேரி, புதுக்கோட்டை, சிட்டம்பட்டி பூதக்குடி, லெம்பலாக்குடி, லஷ்மணப்பட்டி, ஸ்ரீபெரும்புதூர், சென்னசமுத்திரம் ஆகிய 18 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதன்படி, கார் கட்டணம் ரூ.38 லிருந்து ரூ.44 ஆகவும், லாரி ரூ.139 -ல் இருந்து ரூ.155 ஆகவும் உயர்த்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.