ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 ஜூன் 2022 (14:19 IST)

ஜூலை 11ல் பொதுக்குழுவை கூட்ட முடியாது: வைத்திலிங்கம்

Vaithilingam
இன்று நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும் ஜூலை 11-ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தை கூட்ட முடியாது என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட இருந்த தீர்மானங்கள் அனைத்தையும் நிராகரிப்பதாக கேபி முனுசாமி தெரிவித்தார். இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது 
 
மேலும் ஜூலை 11-ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் என்றும் அந்த பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்
 
இந்த நிலையில் இன்று நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும் ஓ பன்னீர்செல்வம் ஒப்புதல் இல்லாமல் ஜூலை 11-ஆம் தேதி பொதுக்குழுவை கூட்ட முடியாது என்றும் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவை அழிவுப்பாதைக்கு ஈபிஎஸ் தரப்பினர் அழைத்துச் செல்கின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்