வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 3 மார்ச் 2024 (07:38 IST)

மாநிலம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து.. பெற்றோர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்..!

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் மார்ச் 3-ம் தேதி அதாவது இன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. 
 
தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது.
 
இதுகுறித்து பெற்றோர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தவறாமல் போலியோ சொட்டு மருந்து வழங்குங்கள் என்று கூறியுள்ளார்.
 
தமிழகத்தில் இன்று 57.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  யுனிசெஃப், உலக சுகாதார நிறுவனம் மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் போலியோ முகாம் பணிகளுக்கு உறுதுணையாக இருப்பதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 
 
Edited by Siva