புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 6 அக்டோபர் 2021 (07:18 IST)

ஊரக உள்ளாட்சித் தேர்தல் - முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி மற்றும் அக்டோபர் 9ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெறும் என ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது என்பது தெரிந்ததே. 
 
அதன்படி இன்று முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியதை அடுத்து வாக்குப்பதிவு மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மொத்தம் 23,998 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் முதல் கட்ட உள்ளாட்சி தேர்தலில் 7921 மையங்களில் 41,93,996  வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.