தமிழகம் முழுவதும் இன்று கார்த்திகை தீப பண்டிகை! – களைகட்டும் அகல் விளக்குகள் விற்பனை!
தமிழகம் முழுவதும் இன்று கார்த்திகை தீப பண்டிகை மக்களால் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று ஆண்டுதோறும் கார்த்திகை தீப விழா கொண்டாடப்படுகிறது. இந்த கார்த்திகை தீப நாளில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
மக்கள் வீடுகளிலும், கோவில்களிலும் கூட அகல் விளக்குகளை ஏற்றி இவ்விழாவை கொண்டாடுகின்றனர். இன்று முதல் தீப நாளில் 27 அல்லது 9 அகல் விளக்குகளை மக்கள் ஏற்றுகின்றனர். இன்று அதனால் அகல் விளக்குகள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியுள்ளது.